ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப்பள்ளி, கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுமை உலகம் மரம் வளர் அமைப்பு இணைந்து செட்டிகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் சிவசைலம் ஸ்ரீ சிவசைலநாதர் கோவில் வளாகப் பகுதிகளை சுத்தப்படுத்துதல், சமுதாய நலக்கூடத்தில் வளாகப் பகுதியில் உள்ள புதர்களை சுத்தப்படுத்துதல், சாலையினை செப்பனிடுதல் ஆகிய பணிகளை மாணவர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் செட்டிகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்று நடும் விழாவுக்கு ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளிச் செயலர் சுந்தரம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், பசுமை உலகம் மரம் வளர் அமைப்பின் பொறுப்பாளருமான நல்லாசிரியர் மாடசாமி முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சேகர் வரவேற்றார். ஓய்வு ஆசிரியர் ஆறுமுகம், ஐஎல்பி ஒருங்கிணைப்பாளர் பாப்பு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் இன்ஜினியர் சுரேஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சமூக ஆர்வலர் முத்துக்குமார் மற்றும் நல்லாசிரியர் மாடசாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். ஆசிரியர்கள் முத்துவேலன், பாலசுப்ரமணியன் மற்றும் பள்ளி தாளாளர் சித்திக், தேவேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நல்வாழ்வு ஆசிரமத்தின் நிறுவனர் மருத்துவர் நல்வாழ்வு சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதையும், அதற்கான காரணங்களையும், நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். திட்ட அலுவலர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஓவிய ஆசிரியர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார்.


