தூத்துக்குடியில் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
புத்தக கண்காட்சியின் நான்காவது நாளை முன்னிட்டு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை அமர்வு நடைபெறுகிறது இதில் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலைத்திறன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை அரசு குறுக்கு சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் பறையடித்து நடனமாடுதல் நிகழ்ச்சியும் முத்தையாபுரம் ஸ்பிக் மேல்நிலைப் பள்ளியில் நவீன நாடகமும் தூத்துக்குடி பி. எம். சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தெற்கத்திய நடனமும் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை குமார சித்தம்பட்டி கருப்பசாமி குழுவினரின் எருது கட்டு மேளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பொது நூலக இயக்குனரும் , இல்லம் தேடி கல்வியை சேர்ந்த சிறப்பு பணி அலுவலருமான இளம் பகவத் ஐஎஸ் அவர்கள் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தாமிரபரணியும் ஆதிச்சநல்லூரும் என்ற தலைப்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசுகிறார். தமிழ் இசை ஓர் பார்வை என்ற தலைப்பில் எழுத்தாளர் இளமுருகும், குழந்தை இலக்கியம் இன்று என்ற தலைப்பில் எழுத்தாளர் உதயசங்கரும், தூத்துக்குடியும் விடுதலைப் போராட்டமும் என்ற தலைப்பில் நெய்தல் அண்டாவும், வ உ சி யின் பன்முகம் என்ற தலைப்பில் குழந்தை எழுத்தாளர் சூடாமணியும் சிறப்புரையாற்றுகின்றனர்.
நிகழ்ச்சியினை கீழ பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு தொகுத்து வழங்குகிறார்.
இன்று 3 ஆம் நாள் (24.11.2022) வியாழக்கிழமை காலை 10 மணி முதல் -1 மணி வரை திருச்செந்தூர், உடன்குடி மற்றும் சாத்தான்குளம் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைதிறன் நிகழ்ச்சிகள்நடைபெறும்.
பிற்பகல் 3 முதல்- 5 மணி வரை விளாத்திகுளம் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் (பெ) மேல்நிலைப்பள்ளி சார்பில் பட்டிமன்றம் மற்றும் கிராமிய நடனம் நடைபெறும்.
மாலை 5 மணி முதல் -6 மணி வரை அம்பலசேரி வெங்கடேசன் குழுவினர் வில்லுப்பாட்டில் – முத்துப்பட்டன் கதை பாடப்படும்.
மாலை 6 மணிஅளவில் பேராசிரியர் டாக்டர் பர்வீன் சுல்தானா (பட்டிமன்ற பேச்சாளர்) கலந்து கொள்ளும் ஏன் படிக்கவேண்டும் என்ற தலைப்பில் உரையும், சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் பூமணி அவர்களின் வாசிப்பு ஓர் அனுபவம் என்ற உரையும் நிகழ்த்தப்படும்.
நிகழ்ச்சிகளை நல்லாசிரியர் சிவகளை ஆ.மாணிக்கம் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் செய்து வருகிறது.


