வல்லநாடு அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி வழிகாட்டுதலின்படி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் மழைக்காலங்களில் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய தன் சுத்தம், நோய் எதிர்ப்பு தரும் உணவுகள், மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியன பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் பொம்மி, வேம்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.


