
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் நயினார். இவரது மகன் கார்த்திக் (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் சிவா(வயது19). இவர்கள் இருவரும் இன்று மதியம் பைக்கில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் குளத்துக்கு கரை பகுதியில் எதிரே வந்த தனியார் பேருந்து மீது பைக் எதிர்பாராத மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

படுகாயம் அடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


