சிறுதொண்டநல்லூரில் அட்மா சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் சிறுதொண்டநல்லூர் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்ளின் உறுதுணை சீரமைப்புத் திட்டம்-அட்மா சார்பில் பயிர் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.
இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி வரவேற்புறை ஆற்றினார். ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் முருகன், உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் தொழில்நுட்பயுரை வழங்கினார். அப்போது அவர் விவசாயிகள் மத்தியில் பேசுகையில், வேளாண்மையில் மண்ணின் முக்கிய பங்கு, இயற்கை வேளாண்மையின் பயன்கள் குறித்தும் அந்த இயற்கை வேளாண்மையில் பயிர் கழிவுகளை முறையாக எவ்வாறு மட்க வைத்து பயிர்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் விரிவான விளக்கயுரையை வழங்கினார்.
மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உழவர் நலத்துறையிலுள்ள திட்டங்கள், இடுபொருட்களின் விவரங்கள் பற்றி துணை வேளாண்மை அலுவலர் சிவக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமுருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


