மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்ததில் தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு, பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியாக இடங்களிலும் தன்னார்வமாக, சேவை மனப்பான்மையோடு, அரசிடம் எந்த நிதி உதவியும் பெறாமல் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த மாதம் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் முன்னிலையில் ஒரே நாளில் காயல்பட்டினம் கடற்கரையில் 36 ஆயிரம் பனை மர விதைகள் விதைதக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் இதனைத் தொடர்ந்து ஒரு கோடி இலக்கை அடைதற்காக தொடர்ந்து பனை மர விதை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தினர் மிக தீவிரமாகவும் ஈடுபட்டு, செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்களத்தில் தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி தலைமை தாங்கினார். சேர்ந்த பூ மங்களம் ஊராட்சி மன்ற செயலர் ரூபஸ்டா முன்னிலை வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வக்கீல் ரமேஷ்,
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், திருச்செந்தூர் நகர தலைவர் கண்ணன், சமூக ஆர்வலர் சங்கர் மற்றும் சேர்ந்த பூ மங்கள ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள்
பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்தனர். முன்னதாக பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முடிவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர் லட்சுமி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.


