பாளை அரசு மருத்துவமனை மிக பிரமாண்டமாகமாறி விட்டது. தினமும் ஆயிக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதுமான கழிவறை வசதி பொது இடத்தில் கிடையாது. இதற்கிடையில் பாளை அரசு மருத்துவமனை ரகுமனியா மேல்நிலைபள்ளி செல்லும் வழியில் ஒரு கழிவறை உள்ளது .பொது கழிவறையான இந்த கழிவறை கடந்த 10 மாத காலமாக பூட்டிக்கிடக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் வசவப்பபுரம் கணேசன் கூறும் போது, மக்கள் கூடும் இடமான பாளை அரசு மருத்துவமனையில் மக்கள் பஸ் ஏறும் இடத்தில் இந்த கழிவறை உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த கழிவறை மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே இந்த இடத்தில் உள்ள கழிவறையை உடனே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பகுதி பொதுமக்களும் இதே கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளனர்.


