செய்துங்கநல்லூரில் நூலக வார விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொன்னையா, அபு உபைஸ், அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வார்டு உறுப்பினர் வேம்பு துரை வரவேற்றார். நூலக புரவலர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச்சுபோட்டி , ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் மரக்கன்றுக¬ ள கொடுத்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவராமன், முத்துலெட்சுமி உள்பட பலர் பேசினர். புதிய புரவலராக கோதர், சந்திரா ஆகியோர் சேர்ந்தனர். அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி, ராஜேந்திரன், பி.எஸ்.என்.எல் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.


