தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டம். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூ ராமஜெயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
நமது மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கிறார்கள். இன்று (20.11.2022) மதியம் 2 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு சுமார் 3:15 மணி அளவில் தூத்துக்குடி விமானநிலையத்தை வந்தடைகிறார். அதன்பின் மறவன்மடம் சத்யா ரிசார்ட்டில் சிறுதுநேரம் ஒய்வெடுத்தப்பின் 5 மணி அளவில் புதுக்கோட்டையில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்கிறார்கள். அதன்பின் இரவு சத்யா ரிசார்டில் தங்கிவிட்டு நாளை திங்கள் கிழமை காலை கொங்கராயன் குறிச்சியில் நடைபெறும் புதிய திரைப்பட தொடக்கவிழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின் திருவைகுண்டம் அணைக்கட்டில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் கன்னியாகுமரிக்கு சாலைமார்க்கமாக செல்கிறார். ஆகவே 20 மற்றும் 21 தேதி ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாள்களும் நமது மாநில செயலாளருடன் இருக்கும் பொருட்டு மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பித்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


