திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் குறித்து காயல்பட்டிணம், திருச்சந்தூர், கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ஆகிய 4 நகராட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி முன்னிலையில் இன்று (27.10.2022) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக காயல்பட்டிணம், திருச்சந்தூர், கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், திருக்கோயில் வளாகம் மற்றும் தற்காலிக தங்கும் கூடாரங்கள், சாலையோர கழிவுநீர் வடிகால்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், நாள் முழுவதும் தூய்மை பணியில் பணியாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி முன்னிலையில், கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகளையும், வாகனங்களை நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருக்கோயில் முன்புள்ள சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், அந்த சாலையை அகலப்படுத்துமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவுகள் வழங்குவதை உறுதி செய்திட உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் தயாரிக்கப்படுவதையும் ஆய்வு செய்தார். அப்போது, உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பேய்க்குளம் மற்றும் ஆவுடையார்குளத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் திருசு;செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, வட்டாட்சியர் சுவாமிநாதன், மண்டல நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் இளங்கோவன், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி ஆணையர்கள் குமார்சிங் (காயல்பட்டிணம்), ராஜாராம் (கோவில்பட்டி), திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


