2022 – 23 முதல் அரை நிதியாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.496.51 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஏறத்தாழ மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு 5 சேவையாற்றி வருகிறது.
சென்னையில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022 – 23 முதல் அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.


