தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பக்கப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் மாரிமுத்து என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரிமுத்து மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


