மரகதம் சந்திரசேகர் (நவம்பர் 11 1917 – அக்டோபர் 27 2001) இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் , பொன்விளைந்த களத்தூரில் பிறந்த இவர் ஒரு பட்டதாரியும் ஆசிரியருமாவார். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காலம் சென்ற லதா பிரியகுமார் இவருடைய மகள் ஆவார்.
இவர் ஐந்து முறை மக்களவையிலும் , மூன்று முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்


