காலை சூரியன் இன்று என்னவோ சுட்டெரித்தது. என்ன கோபமோ தெரியவில்லை சூரியனுக்கு.
கோபாலகிருஷ்ணன் வாக்கிங் போய் விட்டு வீட்டுக்குள் நுழைந்தார். 65 வது நிரம்பியவர். ஆனால் வயதைக் கூற முடியாது. நரையை வைத்து அவரது வயதைக் கணக்கிட முடியாது. அந்த அளவுக்கு தனது உடலை நோயற்று வைத்திருப்பார். தினமும் வாக்கிங் போகவும் தயங்க மாட்டார்.
பொய்யான உலகத்தில் பொய் திரைப் போட்டு மூடி, மீசைக்கு கருமையிட்டு உலகத்தினை ஏமாற்ற விரும்பாதவர் அவரே. கோபாலகிருஷ்ணன். ஆகவே அவருக்கு நிகர்
வீட்டுக்குள் வந்தார். மனைவி தெய்வானை சூடாகக் காப்பி கொண்டு கொடுத்தார்.
“சுகர் பிரி போட்டு இருக்கேன்”. என்றார்
தெய்வானை.
முறைத்தார் கோபால கிருஷ்ணன். “சீனி” போடு இல்லாட்டி, வித்தவுடன் சுகருன்னு சொல்லி விசக் காப்பியைத் தா. அது எதுக்கு பொய்யா ஒரு சுகர் பிரி”.
“சீனி இல்லாட்டி நீங்க குடிக்க மாட்டிங்க. சீனி போட்டா சுகர் ஏறிடும்”.
“எனக்கு சுகரும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. நீ சொன்னா கேட்கவா
போறே”
“எனக்கென்னவோ பயமாக இருக்கு. நீங்க இப்படியே இருங்க” தெய்வானை சொல்லுக்காகத் சுவையாகத்தான் இருந்தது. தலையசைத்தார். காப்பியைக் குடித்தார்.
இன்று ஏனோ தெரியவில்லை. மனம் கனத்தது.
காலண்டரைப் பார்த்தார். நண்பர் வரதனைப் பார்க்க வேண்டிய நாள். வரச்சொல்லியிருந்தார்.
வரதன் தனது வயதுக்கு நிகரனாவர். தாசில்தார் அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நல்ல வாசிப்புக்காரர். எப்போதும் புத்தகம் படிப்பார். புத்தகக் கண்காட்சி என்றால் ஓடிப்போய் ஆயிரத்துக்கு மேல் பணத்தினைச் செலவழித்துப் புத்தகம் வாங்குவார்.
சுமார் 2000 புத்தகம் சேர்த்து வைத்திருந்தார்.
ஒரு சமயம் வரதன் வீட்டுக்குக் கோபாலகிருஷ்ணன் போயிருந்தார். புத்தகத்தினை வரிசையாக அடுக்கி வைத்து பாதுகளத்துக்கொண்டிருந்தார் வரதன்.
“என்ன வரதன் வேலை பயங்கரமாக
நடக்குது”.
“என்ன செய்ய கோபாலா. என்னை விடப் புத்தகத்தினைக் கரையான் வேகமாப் படிக்கு. அதனால் அதுகூட போட்டிப் போட்டு படிச்சிக்கிட்டு இருக்கேன்”.
கோபாலகிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்தது.
“என்னடா சொல்லுத. கரையான் புத்தகம் படிக்குதா?”
“ஆமாம் என்னை விடக் கரையான் வேகமா படிக்குது, நானாவது படிக்க மட்டும்தான் செய்றேன். கரையான் கரைச்சு குடிச்சிருது”.
கரையான் புத்தகத்தினை அரிப்பதை
வேடிக்கையாகச் சொன்னார் வரதன்.
“சரி வரதா. இப்படியே புத்தக்கங்களைப்
பாதுகாத்துக் கொண்டே இருக்கிற. உன்
காலத்துக்குப் பொறவு உன் பிள்ளைங்க பாதுகாக்குமா?”
கோபாலகிருஷ்ணன் பேச்சைக் கேட்டு அமைதியாகி விட்டார் வரதன். பதிலே இல்லை. கண்களில் லேசாக நீர்க்கசிவு.
சரி, இனிமேல் அவரிடம் அதிகமாகப் பேசக்கூடாது என்று கிளம்பினார் பிறகு வரதன் இப்படித்தான். திடீரென்று சிரிப்பார். கோபாலகிருஷ்ணன். தனது மனைவி இறந்த
சில நேரம் கண்களில் நீர்க்கசிவு.
ஆனால் அது எதற்கு என் என்று
முழுமையாகத் தகவல் தெரியவில்லை. இதற்கிடையில் கோபாலகிருஷ்ணன் தன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். மகளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் குழந்தைகளைப் பார்ப்பதற்காகத் தொடர்ந்து மூன்று மாதம் இங்கே அமர்ந்து விட்டார். மனைவி தெய்வானையும் உடன் வந்து தனக்குச் சுகர் பிரி போட்டு வராத நோயை வந்தது போலவே காட்டிக்கொண்டிருந்தார்.
சில நேரம் வரதனிடம் இருந்து போன் வரும் மணிக்கணக்காக பேசுவார். “என்னப்பா நீ அதிகமாக படிக்கியா?, கரையான் அதிகமாக படிக்குதா?” என்று கேட்டால் சிரிப்பார். “விடுவனோ. என் கிட்டே கரையானால் முடியாது, அதனாலக் கரையானைச் சோலி முடிக்கவே ஸ்பெஷல் டானிக் வாங்கி வைச்சிருக்கேன். அதை போட்டு ஸ்பிரே பண்ணிட்டா கரையான் குளோஸ். ஆனால் நான் தான் 10 நாள் வீட்டுக்குள்ளப் போக முடியாது. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி ஸ்மல் எடுக்கு”. என்றார்.
“கோபாலகிருஷ்ணா…சீக்கீரம் வா. இந்த நூலகத்தை என்னால காப்பாத்த முடியுமா தெரியலை. ஏதாவது நூலகத்தில் சேர்க்கணும். எனக்கு நீ தான் உதவி பண்ணணும்”.
“சரி கண்டிப்பா வாரேன்”.
“உடலுக்கு ரொம்ப முடியலை. வயிற்று வலி தாங்க முடியலை. உயிர் போகுது. இதயம் ரொம்ப மோசமா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார். எப்ப என்ன ஆகுமோ?”.
“சேய். பயப்படாதே நீ செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு. நான் நேரில வாறேன். உங்கிட்ட பேசுறேன்”.
காலங்கள் கடந்தது.
ஒரு நாள் மகள் சொன்னாள், “அப்பா உங்களுக்கு ஒரு கடிதம் வந்து இருக்கு. வந்து 10 நாள் இருக்கும் போல, அட்ரஸ் தெரியாம போஸ்ட் மேன் சுத்திட்டு இன்னைக்குதான் வந்து தந்து இருக்கார்”.
* என்ன லட்டரோ தெரியலையே”.
பின் பக்கத்தினைப் பார்த்தார். வரதன் தான்
அனுப்பியிருந்தார்.
உள்ளே எடுத்தார். படிக்க ஆரம்பித்தார். “கோபாலகிருஷ்ணா என் நூலகத்தில இருக்கிற
புக்குகளைப் பத்திரமாக எந்த நூலகத்திலையாவது கொண்டு போய் வையி. சீக்கிரம் வா.” என்று எழுதியிருந்தார்.
“என்னடா லூசு மனுசனா?”.
போனை எடுத்தார். வரதனுக்கு போன் போட்டார் சுவிட்ச் ஆப் என்று இருந்தது. மனதுக்குள் ஏதோ செய்தது.
என்ன ஆச்சு கோபாலகிருஷ்ணனுக்கு
மகளிடம் கூறினார். “எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இவன் கடிதம் எழுதியிருக்கிறதைப் பார்க்கும் போது ஏதோ நடந்தது போல தெரியுது. நான் உடனே ஊருக்கு போகனும்”
மகளிடம் கூறி விட்டு ஊருக்கு வண்டி
ஏறினார்.
ரயில் நிலையத்தில் இருந்து நேராக ஆட்டோ பிடித்து வரதன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டின் முன்னால் சாமியானாப் பந்தல் போட்டு இருந்தது. அருகில் கண்ணீர் அஞ்சலி வால்போஸ்டருக்குள் வரதன் இருந்தார்.
அதிர்ந்தார் கோபாலகிருஷ்ணன். வரதன் போய் விட்டாரா?
உள்ளே அவர் மகன் வரவேற்றான்.
“என்னய்யா அப்பாவுக்கு என்ன ஆச்சி”.
“என்னத்த சொல்ல. புத்தகத்தைப் பாதுகாக்க வைத்திருந்த ரோக்கரை குடிச்சிட்டு செத்துப் போயிட்டாரு”.
“என்ன?”
“ஆமாம் ஸார். வெளியே தலைகாட்ட
முடியல. எதுக்கு தற்கொலை செஞ்சாரு. எதுக்கு தற்கொலை செஞ்சாருன்னு எல்லாரும் நம்மள போட்டுத் திட்டுறாங்க. மனுசன் சாவும் போதும் நம்மள நிம்மதி இல்லாம ஆக்கிட்டுப் போயிட்டாரு”.
“இல்லை. அவருக்கு வயிற்று வலி அதிகமா இருந்துச்சு. அதனால ஒரு வேளை. வயிற்கு வலி தாங்க முடியாம மருந்தை குடிச்சி இருப்பாரோ?”
“இருந்தாலும் புத்தகத்தைக் கரையான் அரிக்குதுன்னு ரோக்கர் மருந்தை வாங்கி வைச்சிகிட்டு, தானே குடிச்சிட்டு செத்துப்போயிட்டாரே?”.
அமைதியாக இருந்தார் கோபாலகிருஷ்ணன்.
“எனக்கே எரிச்சலாகிப் போயிட்டு. எல்லாம் இந்தப் புத்தகத்தால வந்த வினை, இன்னைக்கு முதல் கட்டடமாகப் பழைய பேப்பர் கடைக் காரனை வரவழைச்சி. அவரு வைச்சிருந்த புத்தகத்தை எல்லாமும் எடைக்குப் போட்டுட்டேன்”.
அதிர்ந்தார் கோபாலகிருஷ்ணன், “என்ன தம்பி சொல்ற”.
“ஆமாம் சார். அந்த புக் இல்லாம இருந்திருந்தா வாடகைக்காவது அந்த ரூம்பைக் கொடுத்து இருக்கலாம். ஒரே கரையான் தொந்தரவு. அந்த ரூமே வம்பாப் போய் விடும். ஒரு விசயம் தெரியுமா? உயிரோட இருக்கும் போதே நல்லது கெட்டதுக்கு ஒரு பண்டம் எங்களுக்கு வாங்கித் தர மாட்டார். புத்தகம் வாங்கி வாங்கிக் குவிச்சார். கடைசியில அந்த ரூம்பை மண்ணா ஆக்கினது தான் மிச்சம்”,
வெறுப்புடன் பேசினார் மகன்.
கோபாலகிருஷ்ணன் எழுந்தார்.
“தம்பி எந்தக் கடையில எடைக்குப் போட்டிங்க
“அது எதுக்கு சார்”
இல்லை கேட்டேன்.
வேண்டா வெறுப்பாக ஒரு விசிட்டிங்
கார்டை எடுத்துக்கொடுத்தார்.
வேகமாக வெளியே வந்தவர், அந்தநேரம்
பார்த்து அங்கே சந்திரன் காரில் வந்து சேர்ந்தார். “ஸார் வரதன் சாருக்கு என்ன ஆச்சி”.
“தம்பி யாரு”.
“என் பெயர் சந்திரன். நான் அவர்க்கிட்டே ஒரு உதவி கேட்க வந்தேன்”.
“இப்போ நாம அவருக்கு ஒரு உதவி செய்யணும். அவர் தெய்வமா மதிச்ச 2000 புத்தகத்தை வாங்கி ஏதாவது நூலகத்துக்கு ஒப்படைக்கணும்”,
சந்திரனுக்குப் புரிந்தது. “நான் என்ன செய்யணும் சார்.” “இந்த விலாசத்துக்குப் போகணும்”,
“சரி சார்” சந்திரன் காரைக் கிளப்பினான்.
10 நிமிடத்தில் பழைய புத்தகக் கடைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
கடைக்காரரிடம் பதட்டமாக ஓடினார், ஸர் வரதன் ஸார் வீட்டில இருந்து எடுத்த புத்தகம் என்ணச்சி”,
சிரித்தார் கடைக்காரர். “எஸார் அத்தனைப் புத்தகமும் சூப்பர் புத்தகம் சார். வேனை விட்டு இறக்கவே முடியவில்லை. அப்படியே புத்தம்புதுசா அழுக்கே இல்லாம இருந்தது அதான் நேரே அரவை மிஷினுக்கு அனுப்பிட்டேன்”,
“என்ன சொல்றீங்க”.
“ஆமாம் ஸார்”.
கோபாலகிருஷ்ணன் இதயமே நின்று
விடும் போல இருந்தது. வரதன் சொல்லும்போதே, “கோபால் சாண்டில்யன் புத்தகம் வேணுமா? நான் தாரேன் வேறுயாருக்கிட்டேயும் இருக்காது. சாத்தான்குளம் ராகவன் எழுதுன புத்தகம் எல்லாமே எங்கிட்ட இருக்குது. கண்ணதாசனின் அர்த்த முள்ள இந்து மதம் அத்தனைப் புத்தகமும் என் கிட்டே இருக்கு. வேறே யாரும் இது மாதிரி சேர்த்து வைச்சிருப்பாங்களா? தெரியாது. ஆனால் நான் வச்சிருக்கேன்.”
வரதன் பேசும்போது என்னைப் போன்ற அறிவாளி இந்த உலகத்தில் யாருமே கிடையாது என்று பேசுவார்.
அதுபோலவே எல்லோருக்கும் உதவுவார். கிராமத்தில் இருந்து யார் உதவிக்கு வந்தாலும் செய்வார். குறிப்பாக மகளிர் நலத்திட்டம், முதியோர் உதவித்தொகை, அரசு உதவி பெறுவது என யார் வந்தாலும் உதவுவார். ஓய்வு பெற்றப் பிறகு அரசு அதிகாரிகளிடம் கூட்டிச் சென்று உதவுவார். மனு எழுதிக் கொடுப்பார்.
தற்போது ஆன்லைன் போன்ற விசயம் வரும்போதுகூட நெட் சென்டருக்கு கூட்டிச் சென்று உதவுவார். அவ்வளவு நல்லது செய்தவருக்கு நோய்க் கொடுமை உயிரை மாய்த்து விட்டது. அவருடைய ஒரே ஒரு ஆசைப் புத்தகங்களைப் பத்திரப்படுத்துவது தான். அது மட்டும் நிறைவேறாமல் போய் விடுமோ?.
வரதன், “கோபாலா, சப்போஸ் என் உயிர் போயிட்டாலும் என் புத்தகத்தை மட்டும் எப்படியாவதுக் காப்பாற்றி நல்ல லைப்ரேரியில் சேர்த்து விடு” என்று வரதன் அப்போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. அவர் புத்தகத்தைக் காப்பாற்றாமல் விட்டு விடுவோமோ, அவருக்குப் பயம் தொத்திக்கொண்டது.
கோபாலகிருஷ்ணன் கேட்டார். “அய்யா
அரவை மிஷின் எங்கே இருக்கு?.
“இப்போ மணி என்ன?”
10 மணி. அய்யோ அரைக்க ஆரம்பிச்சு இருப்பாங்களே” கடை ஓனர் அலட்சியமாகக் கூறினார்.
கோபாலகிருஷ்ணனுக்கு இதயமே நின்று விட்டது. என்ன செய்யப்போகிறோம்.
புத்தக ரீடிங் போச்சு. புத்தகம் பாதுகாப்பு போச்சு. ஒரு நல்ல நூலகர் அவர் சேர்த்து வைச்ச புத்தகம், அவர் இறந்து புதைக்கப்பட்ட குழி மூடி காய்ந்து விடும் முன்பே அரவை மிஷினுக்கு போய் விட்டது.
வரதன் எங்கோ இருந்து கத்துவது போல இருந்தது. “நண்பா காப்பாத்து என் புத்தகத்தைக் காப்பாத்து”.
கோபால கிருஷ்ணன் பதறினார்.
“நான் உடனே போகிறேன்”.
வெளியே ஒடி வந்தார். தொடர்ந்து சந்திரன் காரில ஏறினார். முதவாளி கொடுத்த அட்ரஸை வைத்துக்கொண்டுக் காரைக் கிளப்பச் சொன்னார்.
சந்திரனுக்குப் புழிந்தது வரதனிடம் உதவி கேட்க வந்தேன். இப்போது அவர் புத்தகங்களைக் கப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
சந்துபொந்துகளுக்கு இடையே கார் வேகமாகச் சென்றது. கோபாலகிருஷ்ணனின் அவரசத்தைப்புரிந்த சந்திரன் காரை வேகமான ஓட்டினான்.
அரவை மிஷினில் போட்டு இருப்பார்களோ. அப்பா புத்தகம் முழுவதும் என்னவாயிருக்கும். இருவர் மனமும்
படபடவென்று அடித்தது.
சரியாக 15 நிமிடம் கழித்து அந்த இடத்தைத் தொட்டனர்.
அந்த கம்பேனி மிகப்பெரிதாக இருந்தது.
வாட்சுமேன் உள்ளே விட மறுத்தார்.
எனவே ஆட்டோவை வெளியே விட்டு விட்டு ஓடினார்.
உயிரைப் பறிகொடுத்தவர் போலவே ஓடினார்.
ஏதோ ரத்த உறவு விபத்தில் சிக்கிக் கொண்டது அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினார்.
புத்தகம் தானே. அதற்கு உயிரா இருக்கப் போகிறது. என்று எண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இந்தப் புத்தகங்களை அழிவில் இருந்து மீட்க வேண்டும். வரதனுக்குக்கொடுத்த வாக்கைக் காப்பாத்த வேண்டும் வேகமாக ஓடினார்.
வாட்சுமேன், “என்ன அய்யா என்ன அவசரம்”.
முதலாளியைப் பார்க்க வேண்டும்.
“இல்லையய்யா. அவர் அரவை முடிய தண்டியும் வெளியே வரமாட்டார்”
“அய்யோ அரவை மிஷினை நிறுத்தவேண்டும்”.
“அது முடியாது அய்யா. முதல் தடவை
மிஷின் ஓடி முடிந்து விட்டது”.
கோபாலகிருஷ்ணன் தலையில் கையை
வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
“வரதன் சேர்த்து வைத்த வீடு வேண்டும். அவர் உழைப்பில் வளர்த்த அனைத்தும் வேண்டும். ஆனால் அவர் உயிராய் நினைத்த புத்தகங்களைத் தெருவில் விட்டு விட்டார்களே..பாவிகள்.! என்ன செய்ய
திடீரென்று ஆக்கிரோசமாய் எழுந்தார். அரவை மிஷின் உள்ளே இருந்த இடத்தினை நோக்கி ஓடினார். ஆனால் வாட்சுமேன் தடுத்தார். அவரைத் தட்டி விட்டு விட்டு அரவை மிஷின் நோக்கி ஓடினார்.
“அய்யா. ஓடாதீர்கள்” என வாட்சுமேன் ஓட இருவரும் ஒருவரை ஒருவர் விரட்டியபடியே
ஓடினர்.
அவர்கள் பின்னால் சந்திரனும் ஒட ஆரம்பித்தான்.
மூன்றுபேரும் ஓடி வருவதை முதலாளி காமராவில் பார்த்து விட்டுவெளியே வந்தார்.
கோபாலகிருஷ்ணனுக்கு மூச்சி வாங்கியது. வயதுக்கு மீறிய ஓட்டம்.
“அய்யா மிஷினை நிறுத்துங்க.மிஷினை
நிறுத்துங்க.புத்தகத்தைக் காப்பாத்துங்க”.
முதலாளி அருகில் சென்று விட்டார்.
தொடர்ந்து மூச்சு வாங்க ஆரம்பித்தது. என்ன செய்வது என்று அறியாமலேயே மூச்சு வாங்கிய கோபாலகிருஷ்ணன் அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.
மயங்கிய நிலையில் விழுந்த அவரை
தாங்கிப் பிடித்தான் சந்திரன்.
உடனே மிஷின் நிறுத்தப்பட்டது.
கோபாலகிருஷ்ணன் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. 10 நிமிடம், ஹார்ட் அட்டாக்கா
இருக்குமோ. பயந்தே விட்டார் முதலாளி.
ஆனால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தார். “அய்யோ புத்தகங்களைக்
காப்பாத்துங்க”.
முதலாளிக்குப் புரியவில்லை.
கோபாலகிருஷ்ணன் அவரைப் பார்த்தார். முதலாளிக்கு 25 வயது தான் இருக்கும். “தம்பி தம்பி புத்தகம் புத்தகம்”. வரதன் ஆவியே இவர் உடலுக்குப் புகுந்து பேசுவது போலவே இருந்தது.
“என்னய்யா சொல்றீங்க”.
“அரவை மிஷினை நிறுத்தச்சொல்லுங்க.
புத்தகத்தைக் காப்பாத்துங்க”.
“அய்யா உங்க பிரச்சனை என்ன விவரமாக
சொல்லுங்க.
“என் நண்பன் வரதன் வீட்டில 2 ஆயிரம் புத்தகம் இருந்தது. எல்லாப்புத்தகமுமே சிறப்பானது. அதை எடைக்குப் போட்டுட்டாங்க. அந்த புத்தகம் வேணும். தம்பி பிளீஸ் அரவை மிஷினுக்கு அனுப்பிடாதீங்க” முதலாளிக்கு எல்லாமே புரிந்தது. சிரித்தார்.
அய்யா என் அப்பா எனக்கு 20 வய்து இருக்கும்போது இந்த தொழிலை என் கையில் கொடுத்து விட்டு இறந்து போய் விட்டார். அவர் என்னிடம் சொன்னது நல்ல புத்தகம் நல்ல நண்பர்கள். அதனால் நல்ல புத்தகம் எதுவும் வந்தால் அதைப் பிரித்துப் பழைய புத்தகக் கடை நண்பர்களுக்கு விற்பனைக்கு அனுப்பு. உனக்கு நல்ல லாபம் கிடைத்தால் அதை நூலகத்துக்கு அனுப்பு என்பார்.
அதுபோலவே இந்தப் புத்தகங்களைப் பார்த்தேன். 2000 ஆயிரம் புத்தகம் ஒரு சேர்த்து வைத்திருக்கிறார்.அனைத்தும் அருமையான புத்தகங்கள். இதைச் சேர்க்க இந்த மனிதன் என்ன பாடு பட்டு இருப்பான்.
லோடு மேனிடம் கேட்டார், அவர் பையன் இதை எடைக்கு போட்டார் என்று கூறினார். அப்போதே புரிந்துகொண்டேன். இந்த புத்தகங்களைச் சேமித்த மகான் மிகப்பெரியவர். அவர் அருமை கும்பத்துக்கு தெரியவில்லை எனப் புரிந்து கொண்டேன். எனவே அவர் புத்தகங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அதை எல்லாமே தனியாக வைத்திருக்கிறேன்.
புத்தகங்களைப் பார்த்தவுடன் அதை ஓடிப்போய்க் கட்டிப் பிடித்துக்கொண்டார்
கோபாலகிருஷ்ணன்.
வரதா உன் புத்தகத்தைக் காப்பாற்றி விட்டேன். எனக் கதறி விட்டார்.
வரதனிடம் உதவி கேட்க வந்த இடத்தில் அவர் இல்லையென்றாலும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்ய ஒரு அணிலாய் இருந்து விட்டேன் என்ற மகிழ்ச்சியில் பெருமூச்சை காற்றில் கலந்து விட்டு அமர்ந்தான் சந்திரன்.


