தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் அனவரதநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் நடைபெற்றது.
முகாமினை வசவப்பபுரம் பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர் முனியசாமி துவக்கி வைத்தார்.
மாவட்ட டி.ஆர்.டி.பி. ஒருங்கிணைப்பாளர் செ.மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் .ச.இசக்கி மஹாராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 47 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் நிதிஷ் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, பெண் சுகாதார தன்னார்வலர் ரேவதி, அரி பாலகிருஷ்ணன், மஸ்தூர்கள்கலைச்செல்வி, செல்வி, ராமலட்சுமி, தமிழ்ச்செல்வி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


