. வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக் கோவிலில் மகா சனிப் பிரதோஷம் மற்றும் ஐப்பசித்திருக்கல்யாண வைபவம் நடந்தது.வல்லநாட் டில் சீமாறன் சீவல்லப பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத மகா சனிப் பிரதோஷ விழா மற்றும் ஐப்பசித் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக மகா சனிப் பிரதோஷ பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் காட்சி காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது இதனைக் கண்டு கூடியிருந்த சிவனடியார்களும் பக்தர்களும் அரகர மகாதேவா என சிவகோஷமுழக்கமிட்டனர் பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது விழாவில் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத் துறை ஆய்வர் நம்பி, வட வல்லநாடு ஊராட்சித் தலைவி பேபி சங்கர் ஊராட்சி செயலர் சங்கரலிங்கம் புதுக்கோட்டை திருநாவுக்கரசர்சை வ சபைக் குழுவினர், தூத்துக்குடி சதுரகிரி உழவாரப் பணிக்குழுவினர் காவல் உதவி ஆய்வாளர் கருத்தையா, தென்காசி சங்க ர க்குமார், வல்லநாடு மற்றும் சுற்று கிராம பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பூஜைகளை அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தரம் பட்டர் தலைமையில் அம்பை கெய்த்தீஸ்வரன் என்ற ஞானம் பட்டர்,வெங்கடேஸ்வர பட்டர், ஹரிஹர பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை வல்லநாடு திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


