கருங்குளத்தில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது. 26 கிலோ புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் அனந்த முத்துராமன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் உள்ள ஒரு கோவிலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவை சேர்ந்த சேது பாண்டியன் மகன் சிவ மூர்த்தி என்பதும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் சிவ மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 12,000/-மதிப்புள்ள 26 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் 18,000/-மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


