ஆறாம் பண்ணை பஞ்சாயத்து, மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடும் விழாவை நடத்தியது. ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவர் சேக்அப்துல்காதர் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் பகுதி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் மரக்கன்று மற்றும் பனவிதைகளை விதைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிறுவனர் ஐ.கோ, மக்கள் நலப்பணியாளர் அருணாசலம், பள்ளி வாசல் செயலாளர் கனி, வார்டு உறுப்பினர் இப்ராகிம், மக்கள் நல இயக்ககத்தினை சேர்ந்த செய்யது உள்படப் பலர் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து எழுத்தாளர் ஹரிஹரன் நன்றி கூறினார். தொடர்ந்து மூன்றாவது வருடமாகத் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. கடந்த காலத்தில் நட்ட மரங்கள் வளர்ந்து நிற்பதை அனைவரும் சந்தோசத்துடன் ரசித்தனர்.


