தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டம்
*நதிநீர் இணைப்பு தற்காலிக கால்வாய் பணிகள்*
1300 கன அடி தண்ணீர் செல்லும் – சபாநாயகர் அப்பாவு பேட்டி
தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் தற்காலிகமாக மாற்றுப்பாதையில் தண்ணீர் செல்வதற்கான பணிகள் வருகிற அக் – 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு கால்வாயில் 1300 கன அடி தண்ணீர் செல்லும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சியான பகுதிக்கு கொண்டு செல்வதற்காக 2009 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் தாமிரபரணி – நம்பியாறு -கருமேனியாறு திட்டத்தை செயல்படுத்தினார். பொன் ளாக்குடியில் நடந்து வரும் இந்த திட்டப் பணிகளை கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் சபா நாயகர் அப்பாவு நேற்று காலை ஆய்வு செய்தார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
2009ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது ரூ.369 கோடியில் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டு 2011ம் ஆண்டிற்குள் 50 சத வீத பணிகள் முடிக்கப்பட்டது. எஞ்சியிருந்த பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பெற்ற பிறகு இந்த திட்டத்தை விரைவுபடுத்தினார். இந் திட்டத்திற்கு ரூ.933,23, கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் நலத்திட்ட உதவி கள் வழங்க நெல்லை வந்த முதல் வர், நதி நீர் இணைப்பு திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக முடிவடையும். அதற்கு முன்ன தாக மாற்றுப் பாதையில் தண் னீர் கொண்டு செல்வதற்கான வழிகள் உருவாக்கித் தரப்படும் என்றார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் 67.075 கி.மீ நீளத் திற்கும், தூத்துக்குடி மாவட்டத் தில் 8.10 கி.மீ. நீளத்திற்கும் என மொத்தம் 75.175 கி.மீ. நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, 1300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் வருகிற 31ம் தேதிக்குள் நிறைவடைந்து நதி நீர் இணைப்பு திட்ட கால்வாயில் தண்ணீர் செல்லும். எம்எல் தேரி வரை 80 சதவீதம் பணி கள் முடிந்துள்ளது. எனினும் பொட்டல்விளை, மன்னார்பு ரம், கோட்டைகருங்குளம் ஆகிய பகுதிகளில் பணிகள் ஒரு சில இடங்களில் 40 முதல் 45 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இருந்த போதிலும் 3200 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கால் வாயில் தற்காலிகமாக 1300 கன அடி தண்ணீர் கொண்டு செல்வ தற்கான பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்து கால்வாயில் தண்ணீர் செல்லும். இதன் மூலம் நாங்குநேரி, திசையன்விளை. ராதாபுரம், சாத்தான்குளம், உடன்குடி பகுதி விவசாயிகள் பயன் பெறுவர். நிலத்தடி நீர் உப்பாக இருப்பது மாறி விவ சாயத்திற்கு பயன்படும்.
நதிநீர் இணைப்பு திட்டத் திற்காக 40 கிராமங்களில் நில ஆர்ஜிதம் பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. இதில் 30 கிராமங்களில் நில ஆர்ஜிதம் பணிகள் முடிவடைந்து இழப்ப டாக ரூ 237 கோடி நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு பட்டுவாடா செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு சபாநாயகர் அப் பாவு தெரிவித்தார். தொடர்ந்து பொட்டல்விளை, எம்எல் தேரி, முதுமொத்தன்மொழி, இடையன்குடி. மானார்புரம், கஸ்தூரிரெங்கபுரம் மற்றும் கோட்டைக்கருங்குளம் ஆகிய இடங்களில் நடந்து வரும் பணிகளையும் சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.


