திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி சுப்புலெட்சுமி. சுப்புலெட்சுமி நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சென்னல்பட்டியில் உள்ள வயல்காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடிரென மழை பெய்தது. அப்போது மின்னல் சுப்புலெட்சுமியை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


