நமது வெப்சைட் உலக நாடுகளில் இதுவரை 112 நாடுகளை சேர்ந்தவர்களை பார்வையாளராக கொண்டுள்ளது. இன்று 112 வது நாடாக குவாதாலூப்பு என்ற தீவு நாடு இணைந்துள்ளது. புதிய நாட்டு பார்வையாளரை அன்போடு வரவேற்போம். தொடர்ந்து அந்த நாட்டை பற்றியும் பார்ப்போம் -அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
குவாதலூப்பு என்பது கரிபியன் பகுதியில் சிறிய அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும். 1,628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400,132 (சனவரி 2015) ஆகும். வட அமெரிக்காவில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய ஐரோப்பிய ஒன்றியப் பகுதி இதுவாகும்.
குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகளில் பாசு-தெர் மேற்கேயும், கிராண்ட்-டெர் கிழக்கேயும் அமைந்துள்ளன. இவையிரண்டும் குறுகிய நீரிணை ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே பாலங்கள் வழியே போக்குவரத்து இடம்பெறுகின்றன. இவ்விரண்டும் பொதுவாக ஒரே தீவாகக் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு தீவுகள் என சிறிய தீவுகளும் உள்ளன.
பிரான்சின் ஏனைய வெளிநாட்டு மண்டலங்களைப் போன்று, குவாதலூப்பும் ஐரோ வலயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தொகுதியாகும். இதன் அதிகாரபூர்வமான நாணயம் யூரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் ஒருவர் எவ்விதக் கட்டுப்ப்பாடும் இன்றி இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேற முடியும். ஆனாலும், இந்த வெளிநாடு மண்டலம் ஐரோப்பாவின் ஷெங்கன் பரப்பு நாடுகளுக்குள் அடங்கவில்லை. குவாதலூப்பின் தலைநகர் பாசு-தெர் ஆகும். இது பாசு-தெர் தீவில் அமைந்துள்ளது. அதிகாரபூர்வ மொழிகள் பிரெஞ்சு, அந்தீலிய கிரியோல் மொழிகள் இங்கு அனைவராலும் பேசப்படுகின்ற மொழிகளாகும்.


