உலக பெண் குழந்தைகள் தின விழாவில் பெண் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ இந்த உலகம் பாதுகாப்பான இடமாக மாற வேண்டும் என சூலூரைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு. சமூக பாதுகாப்பு துறை ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. பெண் குழந்தைகள் கேக் வெட்டி ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கி விழாவை தொடங்கினர்
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார். சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் முன்னிலை வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள், , குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் குற்றவியலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் குறித்து பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் ஒரு பெண் குழந்தை மகிழ்ச்சியாக வாழ இந்த உலகம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற வேண்டும் என்பதே இங்கு ஒவ்வொரு தனி நபரின் கனவாக இருந்து வருகிறது. சர்வதேச பெண் குழந்தை தினத்தில், பெண் பாலினத்தை உள்ளடக்கிய மற்றும் சமத்துவம் கொண்ட சமூகத்தை நோக்கி ஒன்றிணைய,
இந்தியாவை பெண்களுக்கு பாதுகாப்பான, அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த இடமாக மாற்ற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் , பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் தவறான பிற்போக்கு எண்ணங்களை அகற்றி, ஆரோக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்கவ வேண்டும் . இதை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு , பெண் குழந்தை பாதுகாப்பிற்காகவும் குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டும் பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது . பெண் சிசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த காலங்கள் எல்லாம் கடந்து , நாகரீக வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இந்த காலகட்டங்களிலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது .இதை மாற்றவே ,ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளும் மதிக்கப்பட அனைவரும் உறுதியேற்போம் என கூறினார்.
மேலும் இதனைத் தொடர்ந்து உலகம் ஒரு பெண் குழந்தையின் பாதுகாப்பான மகிழ்ச்சியான இடமாக மாற, அனைவரும் ஒன்றிணைந்து சூலூரைக்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத் தலைவர் உதயகுமார், உதவி தலைமை ஆசிரியை பிருந்தா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன், ஜானகிராமன், வசந்தி மற்றும் பள்ளி குழந்தைகள் திரலானோர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.


