தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு ஐந்து வாரங்களாக கூலி வழங்கப்படவில்லை மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் கூலி வழங்க வலியுறுத்தியும் வறுமை கோடு பட்டியலில் இணைக்கப்படாத மாற்றுத் திறனாளிகளை இணைக்க கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டது இந்த கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் தோழர் கண்ணன் மாநில குழு உறுப்பினர் தோழர் மாடசாமி மாவட்ட குழு உறுப்பினர் சுந்தர் மற்றும் கருங்குளம் ஒன்றிய சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்


