திமுக துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி.,க்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கனிமொழி எம்.பி, சென்னையில் இருந்து விமானம் மூலம் வாகைக்குளம் வந்தடைந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் எப்சிஐ குடோன் அருகில் திமுகவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


