தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேரவை மன்றம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், பண்டைய காலத்தில் தமிழக வரலாறு என்னும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் சிவகளையில் நடைபெறும் தொல்லியல் ஆராய்ச்சியின் தடயங்களையும் சங்ககாலத்தின் தொன்மையையும், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களின் தன்மையையும் மாணவர்களுக்கு புரியும்படி எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் சங்கீதா வரவேற்புரை வழங்கினார். வரலாற்றுத்துறைப் பேரவையின் தலைவி ஸ்ரீ கிருஷ்ண ஜோதி நன்றியுரை வழங்கினார்.


