புலமைப்பித்தன் தமிழ்க் கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் 1968 இல் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் இயற்றியதில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். இவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் “அரசவைக் கவிஞராகவும்” நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
தமிழக அரசின் விருதுகள்
-2001 இல் தமிழக அரசின் பெரியார் விருது
சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்
1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1980-1981 எங்கம்மா மகாராணி
1988- நிறைய திரைப்படங்களுக்கு
1993- பத்தினிப் பெண்
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 செப்டம்பர் 08 அன்று தமது 85 ஆவது வயதில் மறைந்தார்.


