சிங்கம்பட்டி மாமன்னர் சித்தாந்த சிகாமணி சிந்தனை சிகரம், டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மகராஜா அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழா நெல்லையில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிவப்பிரகாசர் நற்பணி மன்ற செயலாளரும் , சிங்கம்பட்டி மாமன்னர் நினைவேந்தல் குழு செயலாளருமான முனைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரதியார் உலக பொதுச் சேவை நிதிய பொது நிதியாளர் கவிஞர் பாப்பாகுடி இரா. செல்வமணி, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணை செயலாளர் கவிஞர் முத்துசாமி, பாரதி முத்தமிழ் மன்ற துணைச் செயலாளர் பத்தமடை ஆசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு சிங்கம்பட்டி மகராஜா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரசு பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டது. சுத்தமல்லி அன்பு இல்லத்திற்கும் குறுக்குத்துறை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கும் பிஸ்கட் மற்றும் உணவு வழங்கப்பட்டது நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிங்கம்பட்டி மாமன்னர் நினைவேந்தல் குழு தலைவர் தாயுமான சுந்தரம் சிறப்பாக செய்திருந்தார்


