ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் காவல்துறை மற்றும் வேளூர் வேலு சமூக நல அறக்கட்டளை இணைந்து மாரத்தான் போட்டிகள் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
இந்த போட்டிகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் போதை தடுப்பு அவசியம் குறித்து பேசினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடந்தது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி வரை போட்டி நடந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம், பொன்னாங்குறிச்சி, வெள்ளூர் வழியாக புதுக்குடி வரை போட்டி நடந்தது.
12 வயது மேற்பட்டவர்களுக்கான 7 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியில் முதல் பரிசு ஜெபக்குமார், இரண்டாம் பரிசு அஜித், மூன்றாம் பரிசு சக்திவேல் ஆகியோர் பெற்றனர்.
4 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசு அழகுராஜா, இரண்டாம் பரிசு முத்துக்குமரன், மூன்றாம் பரிசு இசக்கிமுத்து ஆகியோர் பெற்றனர்.
சிறுமிகளுக்கான போட்டியில் முதல் பரிசு தர்ஷினி, இரண்டாம் பரிசு ஜெனிஷாலிமா, மூன்றாம் பரிசு அப்சரா ஆகியோர் பெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாரத்தான் வீரர்களுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.


