தென் தமிழகத்தில் தேவர், நாடார்,கோனார், இவர்களின் காவல் தெய்வம் சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா என்றால் அங்கே இவருக்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் கூடும் …
ஒரு ஊரில் கொடை விழா என்றால் மகுட கணியான் ரயில்வே தங்கசாமி வருகிறாரா ? என்று ஏங்குபவர் பலர் அதில் நானும் ஒருவன், தெய்வங்களை மகிழ்ச்சியடைய செய்யும் ஒரு தெய்வீக குரல் இவருக்கு …
எனது கிராமத்தில் உள்ள சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக இவர் மட்டுமே பாடி வருகிறார் அப்படி ஒரு கலைநயமிக்க கலைஞன் , இதுபோக பல ஊர்களில் 10.15 வருடங்களாக ஒரே கோவிலில் படித்து வருகிறார்…
இவர் மகுடம் படிக்க ஆரம்பித்தால் சாமி வந்து ஆடுபவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் இது எனக்கு திடீரென எழுத தோன்றியது , இந்த கலைஞன் என்றும் வாழ்க வளமுடன்…


