இந்திய சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள் என்று கூக்குரலிட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங் பிறந்த தினம் இன்று.
சீக்கிய குடும்பத்தில் 1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி சர்தார் கிசான் மற்றும் விந்தியாவுக்கு இரண்டாவது மகனாக பஞ்சாப்பில் பிறந்தார். இவரின் குடும்பம் சுதந்திர போராட்ட வீரர் குடும்பம் என்பதால் இரத்தில் சுதந்திர வேட்கை இயற்கையாகவே ஊற்றெடுத்து விட்டது. பகத் என்றால் அதிர்ஷ்டசாலி என்று பொருள். அதற்கு ஏற்றார் போல் பகத்சிங் பிறக்கும் போது ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த அவர் தந்தை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பகத்சிங் லாகூரில் தனது ஆரம்பகல்வியை பயின்றார். 1919-ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வலாபாக் படுகொலை 12 வயதில் அவரின் மனதில் சுதந்திர வேட்கைகையை விதைத்தது.
14 வயதில் வந்தேமாதரம் என்ற வாசகத்தை எழுதி சுவரொட்டியாக ஒட்டினார். பின்னாளில் பஞ்சாப் சிங்கம் மற்றும் ராஸ் பிஹாரி போசுடன் நட்புறவு ஏற்பட்டது. மாண்டெகுசெம்ஸ் போர்டு சட்டத்தை ஆய்வு செய்ய 1928-ம் ஆண்டு சைமன் குழு லாகூருக்கு வருகை தந்தது. லாகூர் ரெயில் நிலையத்தில் லாலாலஜபதிராய் தலைமையில் சைமன் குழுவிற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் போராட்டகாரர்கள் மீது தடியடி நடத்த காவல்துறை அதிகாரி ஸ்காட் உத்தரவிட்டார். தடியடியில் கடுமையாக தாக்கப்பட்ட லாலாலஜபதிராய் இறந்தார். தன் நட்பின் இறப்புக்கு காரணமாக இருந்த அதிகாரி ஸ்காட்டை சுடுவதற்கு பதில் உதவி அதிகாரி சாண்டர்லசை சுட்டு கொன்ற பகத்சிங் தலைமறைவானார்.
இளம் வயதில் வந்தேமாதரம். வந்தேமாதரம்… என்று ஆங்கிலேய அரசு அலறும் படி இளைஞர் பட்டாளம் முழக்கமிட்டனர். இதற்கிடையில் முதலாளிகளால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேய அரசும் ‘தொழில் சட்டவரைவு’ கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. முடிவுசெய்தவன் காதில் எதை முழங்கினாலும் கேட்காது என்பது போல் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1929 எப்ரல் 8-ம் நாள் சட்டமன்றத்தில் தொழில் சட்ட வரைவு நிறை வேற்றியது ஆங்கிலேய அரசாங்கம். யாரும் எதிர்பாரத வீதமாக சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்ட நாளில் பகத்சிங். ராஜகுரு சுக்தேவ் மூவரும் கூட்டாக சேர்ந்து சட்டமன்றத்தில் குண்டுவீசி விட்டு இன்குலாப் சிந்தாபாத் என்று சரணடைந்தனர். விசாரணையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை கண்காணிப்பாளர் சுத்சிங் லாகூர் துவராகதாஸ் நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வந்து பகத்சிங்கிற்கு கொடுத்தார். நாள் எல்லாம் போராட்டகலத்தில் கலந்து கொண்டவர் சிறையில் புத்தகத்தில் உள்ள போராட்ட வரலாற்றை படித்து கொண்டு இருந்த மாவீரனுக்கு வயது 24 மட்டுமே . இந்தியாவில் உள்ள இளைஞர்களை சுதந்திர போராட்டகலத்தில் குதிக்க உந்து சக்தியாக விளங்கிய மாவீரன் பகத்சிங் வரலாற்றில் பிறந்ததினம் இன்று….. அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என்று பெயற் மாற்றம் செய்யபட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவத்துள்ளது. நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

ப.கோபாலகிருஷ்ணன்


