மனித உரிமை பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்பட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார்.
இதற்காக மாவட்ட ஆட்சியரை பலத்தரப்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பனை பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ்.ஜே.கென்னடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பனைஓலையால் செய்யப்பட்ட மாலையை அவருக்கு அளித்து பாராட்டை தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ஆகியோர் உடன் இருந்தனர்.


