செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் மணி மந்திரம், பாலா, சந்தனகுமார், நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாதத்தில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தை அனைத்தையும் வறுமைக்கோடு பட்டியலில் இணைக்க கோரியும், 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரியும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதற்கு அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


