தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக மாயவன் கடந்த மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றபோது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பதவி ஏற்ற குறுகிய காலத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்தும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் குறித்தும் பயன்படுத்துவார்கள் குறித்தும் பொதுமக்கள் துணிந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாய் பாதுகாக்கப்படும்.
காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு எளிதாய் தெரியும் வண்ணம் பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதும் காவல்துறையின் கடமை என்ற அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.


