கருங்குளத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பள்ளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நேற்யை தினம் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட பள்ளி செல்லா ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆலோசனையின் பேரில் நேற்று கருங்குளத்தில் நடந்த சுதந்திர தினவிழா சிறப்பு கிராமசபை கூட்டத்தில் நீண்ட நாள் பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமம் என்ற நிலை உருவாக்குதல், 6 முதல் 18 வயது வரை மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் சேருதல் புலம்பெயர்ந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் ஆகிய கூட்டப் பொருள்களை கிராம சபை கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், ஆசிரயர் பயிற்றுநர்கள் இராஜேந்திரன், சிவசங்கரி, பீபேகம், வெயிலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போல் இந்த நிகழ்ச்சி நாணல்காடு ஊராட்சி, தெற்கு காரசேரி ஊராட்சி, வல்லநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளிலும் நடந்தது.


