குலசேகரப்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள பகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டவுடன் எஸ்.எஸ்.எல்.வி, போன்ற சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்படும்” என்று தெரிவித்தார்.


