வல்லநாடு போலீஸ் துப்பாக்கி சூடும் தளத்தில் கொரோனா தடுப்பு முகாம் நடந்தது.
வல்லநாடு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு போலீஸ் துப்பாக்கிச் சூடும் தளத்தில் உள்ள மையத்தில் கொரோனா தடுப்பு முகாம் நடந்தது.
முகாமில் பயிற்சி போலீசார் அனைவருக்கும் பரிசோதனை நடந்தது. பாளையங்கோட்டை கிளை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் இந்த சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் நிலவேம்பு குடிநீர், அமுக்கிரா மாத்திரைகள் வழங்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் செல்வக்குமார், சிவரஞ்சனி ஆகியோர் பயிற்சி போலீசாருக்கு நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பான விழிப்புணர்வு உரை அளித்தனர். ஆய்வக நுட்பனர் சுபா மற்றும் ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.


