தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர் சங்கம் மற்றும் உமா ஜீவல்லர்ஸ் இணைந்து வழங்கிய விருது வழங்கும் விழா தூத்துக்குடி ராஜ் மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த இம்ரான்கான், சிறந்த குறும்படத்தை தயாரித்த வகைக்காக சிறந்த விழிப்புணர்வு குறும்பட தயாரிப்பாளர் என்ற விருதை பெற்றார்.
இந்த படத்தின் இயக்குநர் சாம் அவர்களுக்கும் சிறந்த விழிப்புணர்வு குறும்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டது.


