செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோயிலில் நாளை (31.07.2022)அன்று ஞாயிற்று கிழமை மாலை 4 மணிககு அம்மனுக்கு ஆடிபூர வளைகாப்பு நடைபெறுகிறது.
சிவனடியார்கள், புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திருமாங்கல்யம் பலம்பெறவும், குழந்தை பாக்கியம் கிடைத்திடவும், திருமணத்திற்கு நல்ல வரன் அமைந்திடவும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சீர்வரிசை பொருட்கள், அபிசேக பொருட்கள் நிதி உதவி அளிக்க விரும்புகிறவர்கள் திருக்கோவிலில் வந்து ஒப்படைக்கும் படி கேட்டுகொள்கிறார்கள் விழா கமிட்டியினர். மடிநிரப்பி குழந்தை பாக்கியம் வேண்டுவோர் திருக்கோவிலில் விழாகமிட்டியாரிடம் முன்பதி செய்ய வேண்டும் என விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து ஊர்மக்கள் மற்றும் ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரரவை செய்து வருகிறார்கள்.


