இராமானுஜம்புதூரில் மதிப்பு கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் மதிப்பு கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூர் கிராமத்தில் நடந்தது.
இந்த பயிற்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். திருநெல்வேலி ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் நாகராஜன் தானியங்கள், சிறுதானியங்கள், எண்ணை வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விளைபொருள்களில் மதிப்பு கூட்டுதல் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் மேற்கொண்டனர். பயிற்சியில் இராமானுஜம்புதூரைச் சேர்ந்த 40க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


