ஆழ்வார்திருநகரியில் காருக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் முருகேசன் (36). இவர் தமிழ்நாடு தேவர் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவராக உள்ளார். இவர் நேற்று ஆழ்வார்திருநகரியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டாராம்.
அப்போது அப்பகுதியில் நிறுத்தியிருந்த அவரது காருக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டார்களாம். இதில் காரின் முன்பக்க டயர் எரிந்து சேதமானது. இதுகுறித்து முருகேசன் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளைகளை தேடி வருகிறார்.


