மங்களகிரி ராமச்சந்திரபுரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள மங்களகிரி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சொரிமுத்து மகன் பெரியநாயகம் என்பவர், ஏரல் சேர்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் மகன் குருசாமி என்பவர் குடியிருந்து வரும் வீட்டு உரிமையாளரிடம் ரூபாய் 5,000/ பணத்தை 5 மாத்திற்கு முன்பு கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் பெரியநாயகம் ரூபாய் 3,000/ பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு ரூபாய் 2,000/ கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி குருசாமி என்பவர் நேற்று சாயர்புரத்தில் நின்று கொண்டிருந்தபோது பெரியநாயகத்திடம் மீதி பணத்தைக் கேட்டு தகராறு செய்ததுடன் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரியநாயகம் அளித்த புகாரின் பெயரில் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி வழக்கு பதிவு செய்து குருசாமியை கைது செய்தார்.


