தென்திருப்பேரையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை சமுதாய நலக்கூடத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி, மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது குறித்து பேசினார்.
பின்னர் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.
இதையடுத்து, பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி மற்றும் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.


