ஆழ்வார்திருநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆழ்வார்திருநகரில் நடந்தது.
இந்த முகாமை தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பாபு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வைத்தார்.
கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் முத்துராஜ், செல்வன் துரை, பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், பிரேமா, மைய தலைவர் உஷா, ஆயிஷா, குழு தலைவர் முத்துமாரி உள்ளிட்டோர் பேசினர்.
முகாமில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் அஸ்வின் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளித்தனர். இதில் 24 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் விஜயகுமார் நன்றி கூறினார்.


