இன்று (9-7-2022) மாலை 6.00 மணிக்கு தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, “இணைய வழி தமிழியல் உரைகள் – 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வினை நடத்துகின்றன.
இவ்விழாவில் இருவருக்கு ‘முத்தமிழ்த் தேனீ’ எனும் விருதும், இணைய வழி நிகழ்வுகளில் உரையாற்றியவர்களிலிருந்து தேர்வு செய்யப்பெற்ற 26 உரையாளர்களுக்கு, ‘சொற்சுவைத் தேனீ” எனும் விருதும், அதிகமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்களிலிருந்து 5 பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘தமிழ்ச்சுவைத் தேனீ’ எனும் விருதும், நிகழ்வுக்குத் தகுதியுடைய உரையாளர்களைத் தேர்வு செய்து வழங்கியவர்கள், தொழில்நுட்ப உதவிகளைச் செய்தவர்கள் என்று நிகழ்வுக்கு உதவிய 7 பேராளர்களுக்கு ‘தமிழ்ச்சேவைத் தேனீ’ எனும் விருதும் வழங்கப்பட இருக்கிறது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகின்றார். திண்டுக்கல், ஆர்.வி.எஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்கள் பாராட்டுரையும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைச் சங்கக் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு த. ராஜமோகன் அவர்களும், தேனி கம்மவார் சங்கம் பொதுப்பள்ளியின் செயலாளரும், தேனி கம்மவார் சங்கக் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் பிரிவு நிருவாகச் செயலாளருமான திரு சேதுராஜன் வாசு அவர்களும் வாழ்த்துரைகளை வழங்கவிருக்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க அனைவரும் வருக…!


