சுகன்யா பிறப்பு: 09 ஜீலை, 1970 இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் சுகன்யாவுக்கு லேடி கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார்.
சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 9 ஜீலை 1970 ஆம் நாள் ஆர்த்திதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார்.
சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைகாட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியயை உமா தொகுத்து வழங்கினாா் இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன்,டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர்.


