இலவச தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வளர் இளம் பெண்களான குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா சமுதாய நல கூடத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை தையல் பயிற்சி மாணவி வின்சா அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சி நிறைவு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர். எஸ். ஜே. கென்னடி தலைமை தாங்கினார் தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்து பேசினார். அப்போது கூறியதாவது குழந்தைத் திருமணங்கள் நடப்பதற்கும், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிறுத்தமாவதற்கும் குடும்பத்தில் உள்ள வறுமையே முக்கிய காரணம். வறுமையை ஒழிக்க பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்.பெண்கள் தொழில் முனைவராக மாறினால் குடும்பம் பொருளாதார மேம்பாடு அடையும் .இதனால் குடும்பத்தில் வறுமை ஒழியும்.வறுமை ஒழிந்தால் குழந்தை திருமணம் மற்றும் பள்ளி இடைநிறுத்த நடைபெறாது .மேலும் பெண்கள் சொந்தக்கால நிற்க வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், பொருளீட்ட வேண்டும்,பெண்கள் சுய சிந்தனையாளராக மாற வேண்டும், மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும்,பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும், ஜாதி மதமென்ற மதில் சுவர்களை தகர்க்க வேண்டும் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கூறினார்.
லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி தொடர்ந்து 3 மாதம் நடைபெற்றது இதில் 13 வயது முதல் 20 வயது வரையுள்ள குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் வளர் இளம் பெண்கள் 17 பேர் பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியில் கர்ச்சீப், தலையணை உறை, நிக்கர், பெட்டிகோட், பாவாடை வகைகள், மாடல் ஹவுன் வகைகள், மாடல் பிளவுஸ் வகைகள், சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
முடிவில் தையல் பயிற்சி மாணவி அபர்ணா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தையல் பெற்ற வளர் இளம் பெண்கள், பெற்றோர்கள் , மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இலவச தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி சான்றிதழ் வழங்கினார்.


