நாசரேத் அருகே மின்பாதை ஆய்வாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நேற்று கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தபாண்டி (51). நாசரேத் வைத்தியலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த ஜூன் 21ஆம் தேதி கொல்லப்பட்டாா். இது தொடா்பாக நாசரேத் காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படையினா் குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.
மறவா்குறிப்பன்குளத்தைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜன் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பணியின்போது மின்சாரம் தாக்கி இறந்தாா். இதற்கு ஆனந்தபாண்டிதான் காரணம் என, ராஜனின் மகன் ஜான்ராஜ் (17) நினைத்தாராம். இதனால், அவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து ஆனந்தபாண்டியைக் கொன்ாகத் தெரியவந்தது. ஜான்ராஜ், அவரது நண்பா் மூக்குப்பீறி ரிசால்ட் பீட்டா் மகன் அசுவல் (16) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
நாசரேத் புதுப்பச்சேரி குணசேகரன் (28), ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சி செந்தில்குமாா் மகன் முத்துக்குமாா் (24) ஆகியோா் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இந்நிலையில், தனிப்படையினா் மூக்குப்பீறி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள சந்திப் பகுதியில் பதுக்கியிருந்த முறப்பநாடு மணக்கரையைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் அருள்ராஜ் (32) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அவா் ஆனந்தபாண்டி கொலை வழக்கில் தொடா்புடையவா் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனா்.


