நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உத்தம சீடன் தோமா என்ற கிறிஸ்தவ நாடகம் நடைபெற்றது.
இந்தியாவின் முதல் அப்போஸ் தலன் தூய தோமா ஊழியம் செய்து ஜூலை 3 ஆம் தேதி சென்னையில் மரணம் அடைந்து 1950 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் நாசரேத் சொர்க்கவாசல் ஜெபக்குழுவும், நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. ஆகியவையும் இணைந்து உத்தம சீடன் தோமா ஒளி, ஒலி நாடகம் நடைபெற்றது.
நாடகத்தை தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியார் ஆல்பர்ட் ஜெய்சிங் தாமஸ் பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார். ஒய்.எம்.சி தலைவர் எபநேசர் தொகுத்து வழங்கினார். ஆர்.லேவி அசோக் சுந்தர்ராஜ் வரவேற்றுப் பேசினார். தூய யோவான் பேராலய உதவி பாதிரியார் ஜெபஸ்டின் தங்கபாண்டி நிறைவு பிரார்த்தனையை ஏறெடுத்தார். நாடகத்தினை நாசரேத் மக்கள் திரளாக கலந்து கொண்டு, கண்டு களித்தனர்.


