தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் நாகராஜன்(69). இவர் மாட்டு வியாபாரம் செய்து செய்து வருகிறார்.
நாகராஜன் பத்மநாபமங்லத்தில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் கலந்து கொண்டு விட்டு கொங்கராயகுறிச்சி வழியாக கருங்குளம் செல்லும் வழியில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் நாகராஜன் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


