தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் வழங்கிய உரை நிகழ்வுகளில் 15 சிறந்த உரையாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘ சொற்சுவைத் தேனீ ’ விருது வழங்கிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தேர்வுக்காக நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்றவர்கள், உரையாளர்களை வழங்கியவர்கள் உள்ளடங்கிய குழுவினரால் தேர்வு செய்யப்பெற்ற முதற்கட்டப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 35 பேர்களிலிருந்து, இறுதியாக விருதாளர்கள் 15 பேர்களைத் தேர்வுக்குழு முடிவு செய்து அனுப்பியிருக்கிறது. அப்பட்டியல் இதுதான்;
1. திரு ப. அருணகிரி, பயணநூல் எழுத்தாளர், சென்னை. (பயணங்கள் 6-5-2020)
2. திரு முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம். (ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் 8-5-2020)
3. முனைவர் ரெ. நல்லமுத்து, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி. (மரங்களின் மருத்துவ குணங்கள் 9-5-2020)
4. திரு க. மகேந்திரன், வழக்குரைஞர், தூத்துக்குடி. (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில சட்டங்கள், 11-5-2020)
5. திரு ப. புதுராஜா, பொருளாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழு, கூடலூர், தேனி மாவட்டம் (நுகர்வோர் உரிமைகளும் சட்டப் பாதுகாப்பும் 14-5-2020)
6. கவிஞர் சோழ. நாகராஜன், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், கலைவாணர் புகழ் பரப்புநர், மதுரை. (கலைவாணர் எனும் சீர்திருத்தக் கோமாளி 26-5-2020)
7. முனைவர் க. கலா காசிநாதன், கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர். (செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும், 27-5-2020)
8. முனைவர் க. மலர்விழி, மொழிபெயர்ப்பாளர் மற்றும் கன்னடத் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூரு. (மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும் 14-6-2020)
9. முனைவர் ந. புனிதலெட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம். (அய்யா வைகுண்டர் காட்டிய அன்பு வழி 5-7-2020)
10. கேப்டன் முனைவர் பா. வேலம்மாள், முதல்வர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம். (தமிழர் மறந்த விளையாட்டுகள் 23-8-2020)
11. முனைவர் பொ. திராவிடமணி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர். (சமூக முன்னேற்றத்தில் தேவதாசிகள் 6-12-2020)
12. திருநங்கை பத்மினி பிரகாஷ், உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர், கோயம்புத்தூர். (திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் 27-12-2020)
13. முனைவர் கிருபா நந்தினி, இளம் ஆராய்ச்சியாளர், சூழல் நச்சுத்துறையியல், சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம், ஆணக்கட்டி, கோயம்புத்துர். (பறவைகளின் வாழிட நெருக்கடிகள்)
14. முனைவர் அரங்க. மல்லிகா, தமிழ்த்துறைத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. (பெண்கள்: தொடரும் பாலியல் தொல்லைகள் 25-7-2021)
15. முனைவர் ஆ. சந்திரபுஷ்பம், அறிவிப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம், திருநெல்வேலி. (களைப்பின்றி உழைக்க… காதல் தெம்மாங்கு… 13-2-2022)
* விருது பெறும் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைவருக்கும் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…
* இவ்விருதுப் பட்டியலில் இடம் பெறாமலிருந்தாலும், சிறப்பான உரைகளை வழங்கிய அனைத்து உரையாளர்களுக்கும் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…
* இவ்விருதுப் பட்டியலை இறுதி செய்திட உதவிய தேர்வுக்குழுவினர் முனைவர் மு. ஐயப்பன் (தூத்துக்குடி), திரு பழ. பாஸ்கரன் (காரைக்குடி), திரு கோ. மணி (சென்னை) ஆகியோருக்கு மிக்க நன்றி.


